அதீதாவுக்கு

14.

நீ யென்
சௌந்தர்ய
லஹரி…

உன்
பொற்பரப்பில்
பட்டுத் தெறிக்குதென்
விழிப்புலம்…

நீ மீட்டும்
அதீத இசைக்கு
நான்
தீவிர ரஸிகன்…

நம் வண்டி
ஓடிக்கொண்டிருக்குது
மெல்லிய நதியாய்
உன்
ஸ்ருதிலயத்துடன்.

15.

எத்தனையோ பெண்களில்
நீ மட்டும் தனீயாய்

உன் ஒழுங்கமைவு
ஈர்த்துருக்கி
கரைக்குதென்னை

நான் காற்றாகி
உனைநோக்கி வருவதை
நீயும் அறிகிறாய்

உன் குழற்கற்றையோடு
நடம்புரிந்து
நுதல்வழி கண்களில் போந்து
நாசிப்பாலம் ஊர்ந்து
இதழ் மதுவுண்டு
தோள்வழியுருண்டு நகர்கிறேனுன்
மையம் நோக்கி.

(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author