23.
தெருக்கோடியில்
ஒத்தைக்கால் தவமிருந்தேன்
நின்னைவேண்டி
எல்லாக் கண்களும்
பரிதாபமாய் மற்றும்
இரக்கமாய் பார்த்துப்போயின
நீயோ
ஜீன்ஸ் பாண்ட், சின்னூண்டு டாப்ஸில் வந்து
கேலியாய் சிரித்துப்போனாய்
இடையிடையே
இடையொடியக் குலுங்கி.
24.
மிகப்பெரும் தூரிகைக் கலைஞனின்
நவீன ஓவியம்போல்
முற்றிலும்
புரியாத கோடுகளாலான
நின் ‘ராஜ்யத்தில்’
வசித்திடும் ஆணையை
எப்போது பிறப்பிப்பாய்?
(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“