அதிரூபவதிக்கு… (9)

Athiroopavathiku...

நாளுக்கு நாள்
உன்னுடைய
சக தோழிகளுக்கெல்லாம்
வயது கூடிக்கொண்டே போகிறது.
ஆனால்
உனக்கு மட்டும்தான்…
அழகு கூடிக்கொண்டே போகிறது!

********************************

உனக்குப் பின்னால்
ஒளிவட்டம்
எதுவும் தோன்றவில்லை…
கையில் ஆயுதங்களும்
எதுவும் இல்லை…
ஆபரணங்களின் ஆதிக்கமும்
உன் திருமேனியில் இல்லை…
எனினும்
நீ
என் காதலின் கடவுள்.

********************************

யாரிடமும்
இரகசியம் பேசப்
பிடிக்காத
உனக்குள்தான்…
இரகசியமாய்
வளர்ந்து கொண்டு இருக்கிறது
என் காதல்!

********************************

நிறைய பேசுகிறாய்
நிறைய எழுதுகிறாய்
நிறைய சிந்திக்கிறாய்
அனைத்தும்
நிறைவாகவே
நிறைந்திருக்கும்
உன்னிடத்தில்
எப்படி இல்லாமல் போனது…
காதல்?

படம்: நன்றி Wikipedia.

About The Author