நீ
மகிழ்ச்சியாக இருக்கிறாய்.
எனினும்
உன் கூந்தலில்
வாடிய பூக்களை
கண்ட பிறகு
எப்படி என்னால்
மகிழ்ச்சியாக இருக்கமுடியும்?
…………………………………………
எனக்கான காதல்
எந்தக் கண்களில்
பாதுகாக்கப்படுகிறது?
…………………………………………
சுக்கிர தசை
அடித்ததாக
அனைவரிடமும்
பெருமையாகச்
சொல்ல வேண்டும்
அதற்காகவாயினும்
ஒரே ஒருமுறை
என்னை
அடித்துவிட்டுச் செல்!
………………………………………
பேசுகின்ற
உன் கண்களோடு
பேசுகையில்
நான்
பறந்துகொண்டிருக்கிறேன்.
அழுகின்ற
உன் கண்களோடு
பேசுகையில்
நான்
இறந்துகொண்டிருக்கிறேன்!
“
மாமதயானை கடந்த ஒரு வருடத்தில் 20 காதல்மடல்களை நாம் படித்து இன்புற, ஜாலமில்லாத வார்த்தைகளில் கவிதையென கோர்த்தளித்திருக்கிறார். எனக்கு 20 காதல் கடிதங்கள் படித்த நிறைவு. அதுவும் அடுத்தவர் காதல் கடிதமெனில் அதன் சுகமே தனி. இயற்கையிலேயே நீ அழகு, அமுதசுரபியே… உனக்கெதற்கு அலங்காரம், உன் கூந்தல்தான் கவிதை என காதலனாய் வர்ணிப்பதில் தொடங்கி, நட்சத்திரங்களை நகையாக்கமாட்டேன், உன்னைத்தான் என் மனைவியாக்குவேன் என சில நாட்கள் கணவனாய் இருந்து, உன்னைப் போல் இதயம் இல்லாத எந்தப்பெண்ணும் இல்லை, உன் மனம் சேறா சகதியா எனக் கேள்வி கேட்டு ஒரு குடும்பமே நடத்திவிட்டார். இனி வரும் கவிதைகளில் குழந்தைகள் பிறக்கலாம். வாழ்த்துக்கள்.
தொடரட்டும் உங்கள் கடிதங்கள் இரண்டாவது ஆண்டிலும்..மாமதயானை மன்மதபூனையல்ல. மன்மதயானைதான். உண்மையாகவே ஒரு காதலி இருந்தால் கார்த்திகைப் பாண்டியனிடம் சொல்லி உங்கள் கடிதங்களை இ-புத்தக வடிவில் காதலிக்கு அளியுங்கள். காதலை கவிதைகள் சேர்த்து வைக்கும். மன்மார்ந்த வாழ்த்துக்கள்.