
இப்பொழுது நினைத்தாலும்
சிரிப்புதான் வருகிறது…
காதலைக் கண்களால்
படிக்கத் தெரியாத
உனக்கா
நிறையப் புத்தகங்களைப்
பரிசளித்தேன்!
……………………………………
நீ
சரியெனச் சொல்,
நிலவை நிழலாக்குவேன்
நட்சத்திரங்களை நகையாக்குவேன்
வானத்தை வண்ண
உடையாக்குவேன் என்று
கவிதைகளில்
கதையளக்க மாட்டேன்…
நிஜமாகவே
உன்னை
என்
மனைவியாக்குவேன்.
…………………………………………………………………………..
அவள்
உன்னைப் போலவே
சிரிக்கிறாள்!
இவள்
உன்னைப் போலவே
முறைக்கிறாள்!
எந்தப் பெண்ணைப் பார்த்தாலும்
உன்னையே
நினைவுபடுத்துகிறார்கள்!
ஆனால்
தெரிந்துகொள்…
எந்தப் பெண்ணும்
உன்னைப் போல…
இதயம்
இல்லாதவள் இல்லை.
……………………………………………………………………………..
எனக்கு
சொர்க்கம்
நீ
என்னைக் காதலிப்பது
உனக்கு
நரகம்…
நான்
உன்னைக் காதலிப்பது.
“