அதிசய ஜோதிடர் நாஸ்டர்டாமஸ் – 4

நாஸ்டர்டாமஸின் பாக்களுக்கான அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முயன்றோர் ஏராளம்; இன்னும் முயன்று வருவோரும் ஏராளம். அவரது பாக்களுக்கு விளக்கம் கூறி ஆயிரக்கணக்கான நூல்கள் வந்து விட்டன. இந்த எல்லா நூல்களிலும் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு கருத்து இந்தியா மிகப் பெரும் வல்லரசாகும் என்பதுதான்!

கி.பி, 3797ம் ஆண்டு வருவதற்கு இன்னும் 1787 ஆண்டுகள் உள்ளன. அவர் இந்த ஆண்டுகளுக்காகக் கூறியுள்ள பலன்களோ ஆயிரக்கணக்கானவை. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்:

ஆறாம் காண்டம் பாடல் 8: இந்தியாவில் ஒரு பெரும் தலைவர் உருவாவார். அவரைக் கொல்லப் பெரும் சதி நடக்கும். அவரைக் காப்பாற்ற மருத்துவர்களால் முடியாமல் போகும். ஆனால் அதிர்ஷ்டத்தினால் அவர் பிழைப்பார். இதில் குறிப்பிடப்பட்டுள்ள தலைவர் இந்தியத் தலைவர் என்று நாஸ்டர்டாமஸின் விளக்க நூல்கள் குறிப்பிடுகின்றன.
மங்கோலியர் ஆயுதங்களை உபயோகித்து சாவின் ரேகைகளைக் காண்பிக்கும் போது உலகப் போர் துவங்கும். இந்தப் போர் சக்தி மிகுந்த இரண்டு நாடுகளின் மீது கொண்டிருக்கும் நட்பால் இந்தியாவிற்கு ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும்!

ஆறாம் காண்டம்; 27ம் பாடல் :-ஐந்து நதிகள் பாயும் இடத்தில் பயங்கரமான பறக்கும் ஆயுதத்தால் நாசம் ஏற்படும். ஆறு பேர் மட்டுமே தப்பிப்பர். (இது பாகிஸ்தானைக் குறிப்பதாக விளக்கம் அளிக்கப்படுகிறது ).

மூன்றாம் காண்டம்;2ம் பாடல்:-தெய்வீக எழுத்து வானம்.பூமி, செல்வம் அனைத்தையும் தரும். (இது ஓம் என்ற அக்ஷரம் உலகில் ஏற்றம் பெறுவதைக் குறிப்பதாக விளக்கப்படுகிறது)

மேலும் உலக நாடுகள் பற்றி இவர் கூறியுள்ளவை பெரும் வியப்பை ஏற்படுத்துகின்றது.

எட்டாம் காண்டம் 99ம் பாடல் மற்றும் இரண்டாம் காண்டம் 41ம் பாடல்:- போப் ஆண்டவர் ரோமை விட்டு நீங்க நேரிடும். இது குறித்து இங்கிலாந்து புலம்பும். அது வலிமையற்ற நாடாகி விடும்.

ஐரோப்பா தனது மதத்தை இழந்து உலகின் பழமையான மதத்தை ஏற்றுக் கொள்ளும்.

இப்படி நூல் நெடுக இந்தியாவின் ஏற்றத்தை நாஸ்டர்டாமஸ் அள்ளித் தருவது உலகினரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

நுண்மையாக எல்லாப் பாடல்களையும் அலசி ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பார்த்தால் மட்டுமே நாஸ்டர்டாமஸின் பாடல்களுக்குள் புதைந்திருக்கும் எதிர்கால உண்மைகள் புரியும். ஆகவே செஞ்சுரிஸ் நூலை ஒரு நாளில் கற்றுத் தேற முடியாது. இதற்கான வியாக்யான நூல்களை முதலில் படித்து விட்டு மூலத்தைப் படிக்க வேண்டும்.

ஜெர்மானியக் கவிஞரான கதே (1749-1832) இந்த நூலை ஆழ்ந்து படித்து விட்டு வியந்து போனார். அவர் கூறினார்:-
"செஞ்சுரிஸ் நூலிலிருந்து எதிர்காலத்தை நன்கு அறியலாம்"

அந்தக் கவிஞரின் கூற்று முக்காலும் உண்மை என்பதை நாஸ்டர்டாமஸின் ஆரூடப் பலன்கள் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருவதன் மூலம் அறியலாம்.

-நாஸ்டர்டாமஸ் தொடர் முற்றும்

About The Author

3 Comments

  1. சுரா

    ஆச்சரியமான செய்தி. நாஸ்டர்டாம் கூற்று மெய்யாகலாம். ஆனால் ஊழல் பெருச்சாளிகள் நாட்டின் வளர்ச்சியை எவ்வாறு தனதாக்க முயலுவார்களோ? அல்லது இன்னொரு ஹிட்லராக மாறிவிடுவார்களோ? என்ற அச்சம் மேலிடுகிறது.

  2. brintha sivakumar

    னான் உன்கல் நான்கு கட்டுரைகலையும் படித்தேன். மிக ஆச்சரியமாக இருந்தது.
    மேலும் நாச்டச் டாமச் இன் கனிப்புக்கல் கூரவும் முக்கியமாக இலன்கை தமிலரின் விடிவு பட்டி. சில விலக்க நூல்கலின் பெயர் கூருன்கல்

  3. Dr JNS.CHELVAN

    அன்பு எடிடர் அவர்களுக்கு வணக்கம் நாம் இப்பொழுது சொல்லும் விடயங்களைவிட முன்னோர்கள் சொல்வதை அனைவரும் நம்புவது மிக மகிழ்வாக உள்ளது Dr JNS. செல்வன் ,Dinamalar News paper NUMEROLOGIST,0091 9842490001

Comments are closed.