• 1987- ஆம் ஆண்டு ‘அமெரிக்கன் ஏர்லைன்ஸ்’ பச்சை காய்கறி கலவைகளில் இருந்து ஒரு ஆலிவை எடுத்ததன் மூலம் 40,000$ மிச்சப்படுத்தியுள்ளனர்.
• கடந்த 4,000 ஆண்டுகளில் புது வகையான வளர்ப்பு பிராணிகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை.
• மனித உடலில் உள்ள இதயத்தில் இருந்து 30 அடி தூரம் இரத்தம் வெளியேற்ற தேவையான அழுத்தத்தை தமனி ஏற்படுத்திக் கொள்கிறது.
• ஒலி கேட்கும் கருவிகளை காதுகளில் அணிவதால், காதுகளில் உள்ள நுண்கிருமிகள் ஒரு மணி நேரத்தில் 700 மடங்கு அதிகரிக்கும்.
• தீக்குச்சிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பே சிகரெட் தீ மூட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
• பறவைகளில் ஆந்தையால் மட்டுமே தன்னுடைய கழுத்தை 270 கோணத்தில் திருப்ப முடியும்.
• விரல் ரேகைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுவதைப் போல நாக்கின் ரேகைகளும் மாறுபடும்.
• குரங்கு வகையை சேர்ந்த ஆண் பேபூன் விலங்கு சிறுத்தையை அடித்து கொல்லும் வலிமையுடையது.
• நம்முடைய பூமியில் 12,00,000 வகை விலங்குகளும் 3,00,000 வகை செடி கொடிகளும் 1,00,000 வகையான மற்ற ஜீவராசிகளும் உள்ளன.
• அபாயகரமான பறவைகளில் ஒன்றான கேசோவரி பறவை மற்ற விலங்குகளையும், மனிதர்களையும் தன்னுடைய கூர்வாள் போன்ற கூரிய நகத்தினால் கொன்றிடும்.
• நெருப்புக் கோழிகள் கூழாங்கற்களை தின்று அஜீர்ண கோளாறுகளை சரி செய்திடும்.
• பறக்க முடியாத பறவை வகைகளில் ஒன்றான கிவி பறவைகள் முகர்ந்து பார்த்து வேட்டையாடும்.
• 9 பவுண்ட் எடையுள்ள பற்கள் கொண்ட ஒரே விலங்கு யானை.
• முதன்முதலாக பெண்களுக்கு ஓட்டுப் போட உரிமை அளித்த நாடு நியூசிலாந்து.
• அதிக சப்தம் எழுப்பும் விலங்கு நீல திமிங்கிலம்.
• முதல் மின் விசிறியை கண்டுபிடித்தவர் எஸ்.எஸ்.லீலா.
• இந்தியா தானே சொந்தமாக உருவாக்கிய விமானத்தின் பெயர் தேஜஸ்.
• மே 11ஆம் தேதி இந்திய தேசிய தொழில் நுட்ப தினமாகக் கொண்டாடப்படுகிறது.
• பைசா நகர கோபுரத்தில் மொத்தம் 294 படிகள் உள்ளன.
• முதலைக்கு மொத்தம் 68 பற்கள் உள்ளன.
• இந்தியாவில் 50 காசுகள் மதிப்புள்ள தபால் கார்டு தயாரிக்க 3 ரூபாய் 50 காசுகள் செலவாகிறது.
• கருப்பு திமிங்கிலம் பிறக்கும் போது வெள்ளையாக இருக்கும்.
• நீல நிற கண்கள் உடையவர்களுக்கு இருட்டில் நன்றாகப் பார்க்க முடியும்.
• பூமியை விட சூரியன் 330330 மடங்கு பெரியது.
• அமெரிக்காவில் ஆண்களை விட பெண் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகம்.
• மனிதன் இறக்கும்போது முதலில் இழப்பது கேட்கும் திறன்.
• வார நாட்களில் மற்ற நாட்களை விட செவ்வாய் கிழமைகளில் உற்பத்தி அதிகரித்து காணப்படும்.
Source : Web resources
“