• முதன்முதலாகத் தயாரித்தபோது கொக்ககோலாவின் நிறம் பச்சை.
• உலகில் மிகுந்து காணப்படும் பெயர் ‘முகமது’.
• அனைத்துக் கண்டங்களின் பெயர்களின் ஆரம்ப எழுத்தும் முடிவெழுத்தும் ஒன்றேதான்.
• உடலில் உறுதியான சதைப் பற்றுள்ள பகுதி நாக்கு.
• அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு நபரிடமும் 2 கடன் அட்டை கள் உள்ளன எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
• ஆண்களை விடப் பெண்கள் இரு மடங்கு கண் சிமிட்டுகிறார்கள்.
• உங்கள் மூச்சை உங்களால் நிறுத்த முடியாது.
• உங்கள் கை முட்டியை உங்களால் நக்க முடியாது.
• ஒவ்வொரு முறை தும்மும் போதும் இதயம் சில வினாடிகள் நின்று பின்பு மீண்டும் இயங்குகிறது.
• பன்றிகளால் வானத்தைப் பார்க்க முடியாது.
• மிகவும் பலமாகத் தும்முவதால் உங்கள் இடுப்பெலும்பு முறியலாம். அதேபோல் தும்மலை அடக்குவதால் தலை அல்லது கழுத்தில் உள்ள ரத்த நாளங்கள் வெடித்து மரணம் ஏற்படலாம்.
• என்றுமே கெட்டுப் போகாத உணவு தேன்.
• முதலைகளால் நாக்கை வெளியே நீட்ட முடியாது.
• தேரைகளால் மூன்று வருடங்கள் தொடர்ச்சியாகத் தூங்க முடியும்.
• பனிக்கரடிகள் அனைத்தும் இடது கைப் பழக்கம் உள்ளவை.
• வண்ணத்துப் பூச்சிகள் தங்கள் கால்களினால் ருசி அறிகின்றன.
• விலங்குகளில் யானைகளால் மட்டும் குதிக்க முடியாது.
• எறும்புகள் விஷம் அருந்திய பின் வலது பக்கம் விழுகின்றன.
• மின்சார நாற்காலியைக் கண்டுபிடித்தவர் ஒரு பல் மருத்துவர்.
• குதிரையின் கண்களுக்கு அனைத்துமே கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களாகத்தான் தெரியும்.
• தாமரை இலைகளைப் போலவே வாத்தின் முதுகிலும் நீர் ஒட்டுவதில்லை.
• சிங்கம் ஒரே பாய்ச்சலில் 20 அடி தூரம் வரை பாயும்.
• பாம்புக்கு வாசனை அறியும் சக்தி அதன் நாக்கில் உள்ளது.
• உலகிலே தரம் வாய்ந்த கிராஃபைட் களிமண் சிவகங்கையில் கிடைக்கிறது.
(Source : Web resources)
சூப்பர் நிரையா தலைப்பில் எழுதுகிரிர் கல் வழ்த்துக்கல்
ரொம்ப பயனுள்ளதா இருக்கு தொடர்ந்து எழுதுங்க