அக்கரைப் பச்சை

சக்கரை வாழ்க்கையெண்ணி அக்கரைசெல்வர்
சக்கர வாழ்க்கை இதுவெனப் புரிந்து கொள்வர்
வறுமையை வெல்ல வாடிகனும் செல்வர்
வெறுமையை வெல்ல இதுவல்ல வழியென உணர்ந்து கொள்வர்

வறுமையின் கருமை வெந்து சாம்பலாகக் கூடும்
வாழ்வில் வெறுமையோ செந்தீயாய் தினம் எரியும்
சொத்தும் கிடைக்கும் பத்தும் கிடைக்கும்
சொகுசான வீடு கார் எனப் பல கிடைக்கும்
எல்லாம் கிடைத்தது போல ஊருக்குத் தெரியும்
உள்ளில் மெழுகாய் உருகுவது யாருக்குப் புரியும்?

சுகம் தொலைத்து நித்தம் முகம் தொலைத்து
அகம் நனைத்து சொந்தம் தினம் நினைத்து
வேதனையாய்க் கழியுது வாழ்க்கை இங்கு…!

வேரை மறந்து ஊரை மறந்து
உற்றார் உறவினர் சுற்றம் மறந்து
பற்றில்லாமல் கிடைக்குது பல வெள்ளிப் பணம்
கொள்ளியாய் மாறி நித்தம் கொல்வது யார்க்கு புரியும்?

சொர்க்கத்திலும் சோகம் உண்டு
நரகத்திலும் சில இன்பம் உண்டு
தங்கத்திற்கும் சில குறைகள் உண்டு
தகரத்திற்கும் நல் குணங்கள் உண்டு

தலைமுறையை மாற்றிக் கொள்ள
தள்ளிச் செல்வதில் தப்பேதும் இல்லை
நடைமுறை இதுவெனப் புரிந்து கொண்டால் – நெஞ்சில்
அடைமழைக் காலமும் விடுமுறை எடுத்து கொள்ளும்..!

அக்கறையாய் வாழ்வை அமைத்துக் கொண்டால்
எக்குறையும் சற்று எட்டியே நிற்கும்
இக்கரையோ அக்கரையோ
எக்கரையும் சக்கரையாய் இனிதே கரையும்…!

About The Author

13 Comments

  1. DeviRajan

    மிக அருமையான கவிதை. தாய்நாட்டை விட்டு அயல்நாட்டில் வாழும் அனைவருக்கும் இதே நிலமைதான்.

  2. suba.sivakumar

    ஆcசில் எஅரும் முன்பெ அலைபெசியில் (சு)வாசித கவிதைதன்;ஏன்ராலும் இனிக்கின்ட்ரது; Vஆழ்துக்கல் கவிக்ன(னன்ப)ரெ.

  3. geetha

    ஒன்றை இழந்துதான் ஒன்றைப்பெறமுடியும். எதை இழந்து எதைப்பெறுவது என்பதை நாம்தான் யோசித்து முடிவுசெய்யவேண்டும். அருமையான கவிதை.

  4. Mayandi Chandrasekaran

    நன்றி நண்பர்களுக்கு. உஙகள் கருத்துகள் உற்சாகம் கொடுக்கிறது

  5. kiruthika

    your kavithai is very beautyful and very power of words. thainkal eni aluthuim kavithai and any storys your uinmy saimpavaiththyi ithyi poli alutha vaindoim.
    meindoim vailthukal and nainri udan kiruthika.

  6. velvendan

    சொர்க்கம் என்ட்ரலும் நம்ம உர் பொல வருமா

  7. thirunavukkarasu

    கவிதை நன்ட்ராக உள்ளது. முயர்ச்சி தொடரட்டும்.

  8. chanthirasekaran K

    மிகவும் நல்ல கவிதை. எல்லோர் வால்விலும் நடக்கும் யதார்த்தம்.

  9. bharath

    கவிதை வழங்கிய மாயாண்டி குடும்பத்தாருக்கு நண்றி.இப்பணி தொடர வாழ்த்துக்கள் இப்படிக்கு
    இசக்கிமுத்து குடும்பத்தினர்.

  10. gautham.t

    கவிதை சிறப்பாக உள்ளது.கவிதை பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  11. Gautham

    கவிதை மிகவும் நன்றாக உள்ளது.கவிதை பணி தொடரவு வாழ்த்துக்கள்.

Comments are closed.