ஃபிலிம் காட்றோம்! (2) – That Thing You Do

ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் இயக்கிய முதல் திரைப்படமான ‘That Thing You Do’ படத்தில் இடம்பெற்ற அதே தலைப்பைக் கொண்ட பாடலைத்தான் இன்று பார்க்கப் போகிறோம்!

‘That Thing You Do’ என்பதை விளக்குவது கொஞ்சம் கடினம்தான். காதலியின் ஏதோ ஒரு மேனரிஸத்தை ரசிக்கிற காதலன், ‘நீ எப்போதும் செய்வாயே, அதை இப்போதும் செய்து என் மனதை சுக்கு நூறாய் உடைக்கிறாய்’ என்று ஆரம்பிக்கும் பாட்டு, பின், ‘நீ என்னிடம் விளையாடுவதெல்லாம் எனக்குத் தெரியாதென நினைக்காதே. நீ ஒரு நாள் என்னவள் ஆவாய் என்பதை உன்னிடம் நான் சொல்ல ஒரு வழி கண்டுபிடிக்கத்தான் போகிறேன்’ என்று தொடரும்.

காதல் பாடலாய் இருந்தாலும் காட்சிகளோ படமோ காதலைப் பற்றியதன்று. ஈரி என்ற அமெரிக்கச் சிற்றூரிலுள்ள கல்லூரி மாணவர்கள் சேர்ந்து இசைக்கும் ஒரு பாடல் மூலம் அவர்கள் எப்படி நாடு முழுவதும் பிரபலமாகிறார்கள், அந்தப் பாடல் அவர்களை எப்படிப் பிரிக்கிறது என்பதுதான் கதை. 1996-ல் வெளிவந்த இத்திரைப்படத்தின் களம் 1960களில்.

இதற்காக அறுபதுகளின் ட்ரெண்டுக்கேற்றாற் போல படத்தின் அத்தனை பாடல்களையும் அமைத்திருக்கிறார்கள். குறிப்பாக இந்தப் பாடலுக்காக ஒரு போட்டி வைத்து 300 ட்யூன்களிலிருந்து ஆடம் ஷ்லீஸிங்கரின் பாடலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பாடியவர் மைக் வயோலா.

1996-ல் கோல்டன் க்ளோப் மற்றும் அகாடமி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்தப் பாடலை முதல் முறை கேட்கும் போதே ட்யூன் பச்செக்கென்று ஒட்டிக் கொள்கிறது. இரண்டொரு முறை கேட்டுவிட்டால் விடாது ஹம் செய்து கொண்டிருப்பீர்கள்.

படத்தில், ஒரு போட்டியின் போது ட்ரம்மர் வேண்டுமென்றே ஒத்திகை பார்த்ததை விட ஐந்து மடங்கு வேகத்தில் இசையை ஆரம்பிப்பதாய்க் காட்சி வரும். அதனால்தான் அந்தப் பாடல் பிரபலமானதாகக் காட்டியிருப்பார்கள். அந்த வேகம் இந்தப் பாடலுக்கு ஒரு பெரிய ப்ளஸ் பாயின்ட் என்றுதான் சொல்லவேண்டும். 2நி 52 விநாடிகளில் கடகடவென்று ஒரு இசைப் பிரளயம் நடந்துவிட்டு ஓய்ந்தது போலிருக்கும்.

வீடியோவைப் பார்க்கும்போது அத்தனை நடிகர்களும் ஏதோ தாமே இசைத்துப் பாடியது போல அவ்வளவு ரசனையாய்ச் செய்திருப்பார்கள். குறிப்பாக டிரம்மராய் வரும் டாம் ஸ்காட், பிரதான பாடகராய் வரும் ஜானதன் ஆகியவர்களைக் கவனித்துப் பாருங்கள். உங்களுக்கும் அவர்களின் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். இந்தப் பாடலைக் கேட்கும் போது உங்களால் சோகமாய் இருக்கமுடியாதென்று பந்தயமே கட்டலாம்!

பாடலைக் கீழே பார்க்கலாம். அதற்கும் கீழே பாடலின் வரிகள்…

http://www.youtube.com/watch?v=fzllVlzzeuo

You,
Doin’ that thing you do,
Breaking my heart into a million pieces,
Like you always do
And you,
Don’t mean to be cruel,
You never even knew about the heartache,
I’ve been going through
Well I try and try to forget you girl,
But it’s just so hard to do,
Every time you do that thing you do

I,
Know all the games you play,
And I’m gonna find a way to let you know that,
You’ll be mine someday
‘Cause we,
Could be happy can’t you see,
If you’d only let me be the one to hold you,
And keep you here with me
‘Cause I try and try to forget you girl,
But it’s just so hard to do,
Every time you do that thing you do

I don’t ask a lot girl,
But I know one thing’s for sure,
It’s the love I haven’t got girl,
And I just can’t take it anymore

‘Cause we,
Could be happy can’t you see,
If you’d only let me be the one to hold you,
And keep you here with me
Cause it hurts me so just to see you go,
Around with someone new,
And if I know you you’re doin’ that thing,
Every day just doin’ that thing,
I can’t take you doing that thing you do
 
அடுத்த வாரம் மீண்டும் ஃபிலிம் காட்டுவோம்…

About The Author