உன்னை நான் கண்ட நாள் முதல் காதலுற்றேனா ?
இல்லை.. நீ என்னைக் கண்ட நாளில் காதலுற்றேனா ?
ஈன்றவள் ஈந்ததோ ? இல்லை . . . தகப்பன் தந்ததோ ? இல்லை . . . உறவுகள் உணர்த்தியதோ ? இல்லை . . . உற்றார் உரைத்ததோ ? இல்லை . . . நட்புகள் நவின்றதோ ? இல்லை . . . பால்ய வயதின் பழக்கமோ ? இல்லை . . . பள்ளியில் பயின்றதோ ? இல்லை . . . பருவ வயதில் படர்ந்ததோ ? இல்லை . . . பல்கலையில் படித்ததோ ? இல்லை . . . பல பிறப்பில் பதிந்ததோ ? இல்லை. . .
பின் எப்போது காதலுற்றேன்.. உன்னைக் கண்டவுடன் காதலென்று சொல்ல . . .?
உன்னை நான் கண்ட நாள் முதல் காதலுற்றேனா ? இல்லை.. நீ என்னைக் கண்ட நாளில் காதலுற்றேனா ?
எனக்குள் காதல் இருந்ததால் காதலுற்றேனா ? இல்லை . . .